India
பள்ளி மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசி, ஆபாச படங்களை காட்டிய ஆசிரியர் கைது: தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!
கர்நாடக மாநிலத்தில் கோலார் தாலுகாவில் இருக்கும் அரசு பள்ளியில் நரசாபுர கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்.
அப்போது, முதல் இரவு என்றால் என்ன? என்று மாணவ மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். தாம்பத்தியம் குறித்தும் விளக்கிப் பேசி இருக்கிறார். மாணவ - மாணவிகளுக்கு அது தொடர்பான ஆபாச படங்களையும் காட்டி பேசி இருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் பொதுமக்களும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர் பிரகாஷைப் பிடித்து அடித்து உதைத்திருக்கிறார்கள். பின்னர் ஆசிரியரின் செயல் குறித்து கோலார் தாலுகா வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் மாணவ மாணவியரிடம் அதிகாரி விசாரணை நடத்தி வகுப்பறையில் ஆசிரியர் பிரகாஷின் செயல் குறித்து தெரிய வந்ததை அடுத்து அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பின்னர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!