India

பாதுகாப்பான கார்கள் பட்டியல்.. 5 STAR பெற்ற Mahindra.. 1 STAR மட்டுமே பெற்று Maruti Suzuki அதிர்ச்சி !

உலகம் முழுவதும் ஏராளமான கார் நிறுவனங்கள் இருந்தாலும் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா இந்த இரு நிறுவனங்களே இந்திய சந்தையில் கோலோச்சுகின்றன. பொதுவாக இந்தியர்கள் பிற வசதிகளை விட பாதுகாப்பான கார்களை தேர்வு செய்வதால் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றன.

இந்த நிலையில், 'குளோபல் NCAP' வெளியிட்ட பாதுகாப்பான கார்கள் பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக வரவான 'ஸ்கார்பியோ N' வகை கார் 5 ஸ்டார்களை பெற்று மிகவும் பாதுகாப்பான காராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் ஏற்படும் பாதிப்பு, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவைகளிலும் மஹிந்திரா 'ஸ்கார்பியோ N' வகை பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்து ஸ்டார்களையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் இந்த கார் பெற்று இந்த கார் அசத்தியுள்ளது.

இதற்கு முன்னர் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய இரு கார் மாடல்களும் ஏற்கனவே ஐந்து ஸ்டார் ரேட்டிங் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆறு ஏர் பேக்குகள், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் கருவி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அதிநவீன அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் 1 புள்ளிகளை மட்டுமே பெற்று மோசமான இடத்தை பிடித்துள்ளது. அதே நிறுவனத்தின் ப்ரஸ்டோ ரக காரும், இக்னிஸ் ரக காரும் 1 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஆய்வு முடிவு மாருதி சுசூகி வைத்திருக்கும் நபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: ஒருவழியாக மீண்டும் அமலுக்கு வந்த TWITTER ப்ளூ டிக் சேவை.. சொன்னதை செய்தாரா எலான் மஸ்க் ?