India
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியரால் கொந்தளித்த பெற்றோர் -பாஜக ஆளும் மாநிலத்தில் ஷாக் !
கர்நாடகா மாநிலம் மண்டியா என்ற பகுதியில் அமைந்துள்ளது பேபி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவ - மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்,
இது முதன்முரையாக இல்லாமல், தொடர்ந்து பல முறை நடந்து வந்ததால் கோபப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஒன்றாக கூடி பள்ளி வளாகத்தின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரையும் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்தும் வந்தனர். ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் முரண்டு பிடிக்க, இதனால் இந்த சம்பவம் குறித்த தகவல் வட்டார கல்வித் துறை அதிகாரி வரை சென்றது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதத்தையும் அளித்தனர். இதையடுத்து பெற்றோர்களின் புகார்களை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரையும் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் சம்பவ இடத்தில் இருந்து பெற்றோர் கலைந்து சென்றுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!