India
இளைஞரின் தலையை துண்டாக வெட்டி நண்பர்களுடன் Selfie எடுத்த நபர்.. ஜார்கண்டில் கொடூரம்!
ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேசாய் முந்தா. இவரது மகன் கனு முந்தா. இவரை உறவினர் சாகர் முந்தாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து வீடு புகுந்து கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவரது தந்தை தேசாய் முந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சாகர் முந்தாவை கண்டுபிடித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
தேசாய் முந்தாவின் குடும்பத்திற்கும், சாகர் முந்தாவின் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில்தான் தேசாய் முந்தா வீட்டில் இல்லாதபோது தனது நண்பர்களுடன் சேர்ந்து கனு முந்தாவை கடத்தி சென்றுள்ளனர்.
பிறகு குமாங் கோப்லா காட்டுப்பகுதியில் அவரது தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேலும் அந்த தலையை எடுத்து நண்பர்கள் தங்களது செல்போனில் ஒருவர் மாறி ஒருவர் செல்ஃபி எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் காட்டுப்பகுதிக்குச் சென்று தலையில்லாத அவரது உடலை மீட்டுள்ளனர். பிறகு அங்கிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள துல்வா துங்க்ரி பகுதியில் தலையை கண்டுபிடித்தனர். மேலும் 5 செல்போன்கள், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஒரு காரை போலிஸார் பறிமுதல் செய்து சாகர் முந்தா மற்றும் அவரது நண்பர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!