India
ஓடும் ரயிலில் டீசல் திருட்டு.. தொடர்ந்து நூதனமாக திருட்டில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள்..வெளியான VIDEO!
பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டீசல் எஞ்சினை சிலர் மொத்தமாக திருடி சென்றது விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக அதே பீகாரில் இரும்பு பாலத்தையே மொத்தமாக சிலர் திருடி சென்று விற்பனை செய்த்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பீகாரில் ஒரு அதிர்ச்சி திருட்டு சம்பவம் நடந்துள்ளது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகில் இருக்கும் பிஹ்தா என்ற இடத்தின் வழியாக எண்ணெய் டேங்கர்களை எடுத்துக்கொண்டு ஒரு சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்துள்ளது.
அப்போது அந்த ரயில் ஒரு பாலத்தின் வழியாக சற்று மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது அதன் வேகத்துக்கு இணையாக சென்ற சிலர் தாங்கள் வைத்திருந்த புக்கெட் மூலமாக சரக்கு ரயிலில் இருந்து டீசல் திருடியுள்ளனர்.
இதனை பாலத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதன் பின்னர் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சரக்கு ரயில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துக்கு சொந்தமான டீசலை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைத் தொடர்ந்து பீகார் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். பீகாரில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!