India
நடு ரோட்டில் பெண்ணை வெட்டிய இளைஞர்கள்.. பண தகராறு காரணமாக பீகாரில் நடந்த வெறிச்செயல்!
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக் யாதவ் - நீலம் தேவி தம்பதியினர். அதே பகுதியில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வந்துள்ள இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷகீல் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இதனால் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கமாக செல்வது போல், அருகிலிருந்த கடைக்கு தனது மகனை கூட்டி சென்றுள்ளார். அங்கே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தனது சகோதரர் முகமது ஜூதினுடன் அங்கு வந்த ஷகீல், அவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் இந்த தகராறு முற்றிப்போகவே தனது சகோதரருடன் சேர்ந்து கூட்டம் நிறைந்த சந்தையில் அனைவரது முன்னிலையிலும் நீலம் தேவியை தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு தாக்கியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணின் மார்பை கோழி வெட்டும் கத்தியை கொண்டு வெட்டியுள்ளார். மேலும் அவரது கைகள், கால்கள், காதுகள் உள்ளிட்டவற்றையும் வெட்டியெறிந்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த சிலர் சத்தம் போடவே அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திலே உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கொலையாளிகளில் ஒருவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!