India

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரிங்கி மற்றும் பிங்கி இரட்டைச் சகோதரிகளான இருவரும் சிறுவயது முதலே ஒருவருக்கொருவர் மிகவும் பாசமாக இருந்துள்ளனர். வெளியே எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றவர்கள் ஒன்றாக படிப்பை முடித்து ஐ.டி ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியே செல்லவேண்டி இருக்கும் என்பதால் வித்தியாசமாக யோசித்த இருவரும் ஒரே ஆணை திருமணம் செய்ய முடிவுசெய்துள்ளனர். இவர்களுக்கு அதுல் அவ்தாதே என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.

இரட்டை சகோதரிகளின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அதுல் தனது காரில் சகோதரிகளின் தாயை மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். இப்படி தொடங்கிய பழக்கம் நாளடைவில் இவர்களை நெருக்கமாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அந்த இளைஞரை திருமணம் செய்ய சகோதரிகள் முடிவெடுத்து அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக்கொண்ட நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருவருக்கும் திருணம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக நிலையில், இரண்டு பேரை திருமணம் செய்த மணமகன் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC இன் பிரிவு 494 இன் கீழ் மணமகன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்.. முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த 2-வது வெற்றி !