India
வெளிநாட்டு மாணவிக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை.. பேராசிரியரின் செயலால் ஹைதராபாத்தில் அதிர்ச்சி !
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அது தவிர வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பயிலும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரை மாலை 4 மணி அளவில் படிப்புக்கு தேவைப்படும் புத்தகங்கள் தருவதாக பேராசிரியர் ஒருவர் அழைத்துள்ளார்.
இதனை நம்பிய அந்த வெளிநாட்டு மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிறிது நேரம் மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் பின்னர் அந்த பெண்ணிடம் மது அருந்துமாறு கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண் மது அருந்தியதும் பேராசிரியர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அங்கிருந்து உடனடியாக வெளியேறி சக மாணவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!