India
கணவனை பழிவாங்க 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை: கர்நாடகாவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட ஹோலே பீடியில் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்னா கவுசர். இவருக்கு 7 வயதில் ஹாரிஸ் என்ற மகனும், 4 வயதில் அலிசா, 2 வயதில் பாத்திமா என இரண்டு மகள்களும் இருந்தனர்.
இவர் மத்தூர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் உஸ்னா கவுசருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் கடும் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அடுத்தநாள் காலையில்தான் 4 பேரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து அங்கு வந்து 4 பேரில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!