India
8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் !
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இந்த மாநிலத்தின் தலைநகரான கர்நாடகாவில் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பயலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதன் காரணமாக, ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பான KAMS சார்பில் மாணவர்களின் பைகளை சோதனையிட பரிந்துரை வழங்கப்பட்டது. அதன்படி பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டது.
அப்படி சோதனை நடத்தியதில் ஏராளமான மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி 8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள், கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை குறித்து பேசிய KAMS பொதுச்செயலாளர் சஷி குமார், "சில மாணவிகளின் பைகளில் கருத்தடை சாதனங்கள் இருந்துள்ளது. தண்ணீர் பாட்டில்களில் மது கலந்து இருந்தது" என்று கூறி அதிரவைத்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகளில் இது தொடர்பாக சிறப்பு பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த கூட்டங்களில் மாணவர்களின் பைகளில் இருந்த பொருள்கள் பெற்றோரிடம் காட்டப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தின் சிக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!