India

விடாமல் துரத்தும் கடன்.. சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை : 2 வயது மகளை கொன்ற IT ஊழியர் -பெங்களூருவில் சோகம்!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல். 45 வயதுடைய இவர் தனது மனைவி பாவ்யா மற்றும் 2 வயது மகள் ஜியாவுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஐடி ஊழியரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வேலையை இழந்துள்ளார். இதனால் அவர் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

மேலும் பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்த அவர், கடன் தொல்லையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகைகளை திருடி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுவும் அப்போதே கண்டுபிடிக்கப்ட்டது. இதையடுத்து தொடர்ந்து வெளியில் கடன் வாங்கி தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்த இவருக்கு அதிக கடன் சுமை இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை காரில் வெளியில் அழைத்து சென்ற ராகுல், பெங்களுருவில் இருந்து சுமார் 60 கி.மீ தூரம் வரை கூட்டி சென்றுள்ளார். அங்கே தனது மகள் என்றும் பாராமல் அவரை கொலை செய்து, சடலம் மற்றும் காரையும் அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என்று ஒருபுறம் மனைவி புகார் அளிக்க, மறுபுறம் சடலத்தை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பிறகு சடலத்தை மீட்ட அந்த பகுதி போலீசார் கார் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இது ராகுலின் கார் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவரது பாவியாவுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கணவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். சுமார் 1 வார காலத்திற்கு பிறகு குற்றவாளியை காவல்துறையினர் வேலூரில் கைது செய்தனர். பிறகு அவரிடம் விசாரிக்கையில், தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தை கூட சரிவர நடத்தமுடியவில்லை என்றும் கூறினார்.

அதோடு குழந்தையை ஏரியில் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் தண்ணீர் ஆழமில்லாமல் இருந்தால் தான் பிழைத்த கொண்டதாகவும் கூறினார். மேலும் பசியால் தனது குழந்தை அழும்போது, அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க கூட தன்னிடம் பணமில்லை என்றும், அதனால தான் குழந்தையை தானே கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் பசியால் தனது குழந்தை அழும்போது, அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க கூட தன்னிடம் பணமில்லை என்றும், அதனால தான் குழந்தையை தானே கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார். மேலும் "தனது மகளை யாரோ கடத்தி விட்டார்கள்; பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்" என அவரது மாமாவுக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐடி-யில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தனது மகனுக்கு சாப்பாடு கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என்று 2 வயது மகளை கொலை செய்துள்ளது பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தொடர் உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் : பணத்தை இழந்த வட மாநில பெண் எடுத்த விபரீத முடிவு !