India
கோழிக்கறியில் மயக்க மருந்து.. கழிவறை குழியில் புதைப்பு.. கணவர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி வாக்குமூலம்
பஞ்சாபில் கணவர் காணாமல் போனதாக மனைவி நடமாடியதையடுத்து விசாரிக்கையில், அவரை கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளது தெரியவந்தது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் என்ற பகுதியை அடுத்துள்ளது பக்ஷிவாலா. இங்கு வசித்து வருபவர் அம்ரிக் சிங் - ராஜி கவுர் தம்பதியினர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவரை காணவில்லை என்று மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரிக்கையில் அதிகாரிகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் தொடர்ந்து மனைவியிடம் விசாரைக்கையில் அவரது வாக்குமூலம் சந்தேகம் ஏற்படும்படியாக இருந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது தான் தான், தனது கணவரை கொன்று 25 ஆழ கழிவறை குழியில் புதைத்து விட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து விசாரிக்கையில், மனைவி ராஜியும், அதே தெருவில் வசிக்கும் சுர்ஜித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீது கணவருக்கு சந்தேகம் எழவே, உடனே அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 1 மதத்திற்கு முன்பு தனது கணவருக்கு கோழிக்கறி சமைத்து கொடுத்துள்ளார். அதில் மயக்க மாத்திரையும் கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் கணவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் மனைவி மற்றும் காதலன் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்,. மேலும் அதனை உடலை கழிவறைக்காக தோண்டப்பட்ட சுமார் 25 அடி ஆழ குழியில் புதைத்துள்ளனர்.
மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி புதைக்கப்பட்டுள்ள சடலத்தை காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!