India
"பா.ஜ.கவால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து"... பரபரப்பை கிளப்பும் டெல்லி துணை முதல்வர்!
ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தாங்கள் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கவிழ்த்து அங்கு ஆட்சியைப் பிடிக்க பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. சமீபத்தில் கூட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த சிவ சேனா ஆட்சியைக் கழித்தது. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தது.
இப்படி, தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அப்படிதான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கழித்து விட வேண்டும் என தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் டெல்லி துணை முதல்வருக்கு பல்வேறு ஆசைகள் காட்டியும் அவர் எதற்கும் படிந்து வராததால் ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி சிபிஐ ஏவி மிரட்டி வருகிறது. மேலும் பா.ஜ.கவின் மூலமாக தனக்கு நெருக்கமானவர்களே பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை அன்மையில் வைத்தார்.
இப்படி ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.கவுக்கு இடையான முட்டல் மோதல் போக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால் பா.ஜ.கவினர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கடும் கோபத்திலிருந்து வருகின்றனர். மேலும் குஜராத் தேர்தல் தோல்வி பயம் காரணமாக பா.ஜ.க பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள மனிஷ் சிசோடியா, " குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி பயம் காரணமாக ஆம் ஆத்மீ கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. இந்த சதி வேலையைத் திட்டமிட்டு வருவது பா.ஜ.க-வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனிஷ் திவாரிதான்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!