India
சரக்கு லாரியால் மூண்ட மோதல் : அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் பதற்றம்.. துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி !
வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.
அண்மையில் அஸ்ஸாம் மேகாலாயா இடையேயான எல்லை பிரச்சனை உக்கிரமாக வெடித்தது. அப்போது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த சண்டையில் 6 பேர் பலியானார்கள்.
பின்னர் இரு மாநில எல்லை பிரச்சனையில் ஒன்றிய பா.ஜ.க அரசு தலையிட்டு, இருமாநில எல்லை கூட்டம் நடத்தியது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமுக தீர்வுக் காணப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சனை எழுந்துள்ளது.
அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று சென்றுள்ளது. இதனை அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது லாரி ஓட்டுநர் தப்பி முயறந்தால் வனத்துறை துப்பாக்குச் சூடு நடத்தி மூன்று பேரை பிடித்து சிறைபிடித்தனர்.
இந்த தகவல் மேகாலயா மாநிலத்தில் பரவியத்தைத் தொடர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் சில கும்பல் அஸ்ஸாம் வனத்துறையை முற்றுகையிட்டது. அப்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனகும்பல் வலியுறுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்ஸாம் போலிஸ் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அஸ்ஸாம் போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6பேர் பலியானார்கள். இதனால் இருமாநில எல்லைகளிடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!