India
மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் புதைத்த கணவர்.. டெல்லி,உ.பியைத் தொடர்ந்து ம.பியில் கொடூரம் !
டெல்லியில் வாடகை வீட்டில் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் காதலியை காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியெறிந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாகங்களாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு மத்திய பிரதேச மாநிலத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியை சேர்ந்தவர் ராம் பட்டேல். இவரது மனைவி சரஸ்வதி. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் ஏற்பட்டு சண்டையில் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அந்த தருணத்தில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சம்பவதன்று மனைவியை காட்டுக்கள் அழைத்து வந்த ராம் பட்டேல் மனைவியை தான்கொண்டு வந்திருந்த கோடாரியால் வெட்டியுள்ளார். இதில் மனைவி சம்ப இடத்திலேயே மரணமடைந்த நிலையில், மனைவியின் தலை மற்றும் உடல் பகுதியை வெட்டி காட்டிற்குள் வெவ்வேறு பகுதியில் புதைத்து எதுவும் நடக்காதது போல வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், காட்டில் ஒரு பெண்ணின் ஆடை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் பெண்ணின் உடல்பாகங்களை கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணையில் அது சரஸ்வதி என்பவரின் உடல் என்பது தெரியவந்த நிலையில், அவரின் கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!