India
சிவப்பு நிற சூட்கேஸில் இருந்த சடலம்.. அலறியடித்து ஓடிய பயணிகள்: பஞ்சாப் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
பஞ்சாம் மாநிலத்தில் ஜலந்தர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்நிலையில் இன்று ரயில் நிலையத்தில் காலையிலிருந்தே கேட்பாரற்று தனியாகப் பெரிய சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று இருந்தது.
இது குறித்து ரயில்வே ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார்அங்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் சடலம் ஒன்று இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அது ஆண் சடலம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் சூட்கேஸை விட்டுச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் யார் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சூட்கேஸில் எவ்விதமான ஆவணங்கள் இல்லாததால் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பதை போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேஸில் எடுத்து வந்தார்களா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!