India
காதலி துரோகம் செய்துவிட்டதாக விரக்தி.. Facebook நேரலையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு: பார்த்தவர்கள் பீதி
உத்தர பிரதேச இளைஞர் ஒருவர், காதலி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, Facebook நேரலையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மகாராஜ் கஞ்ச் பகுதியை அடுத்து புரந்தர்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷைலேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். நீண்ட வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், அடிக்கடி நேரில் சந்தித்து வருவர்.
இந்த நிலையில் ஒரு நாள் இவர்கள் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது அவர்கள் பெண்ணை கண்டித்துள்ளனர். மேலும் இளைஞரையும் எச்சரித்துள்ளனர். இதனால் இருவரும் இரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இதனையும் அறிந்த பெண்ணின் பெற்றோர் பெண்ணை கடுமையாக கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு அவருக்கு வேறொருவருடன் நிச்சயமும் செய்து வைத்துள்ளனர். நிச்சயம் முடிந்த கையோடு இளம்பெண், இளைஞரை சந்திப்பது, பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவரை முழுமையாக தவிர்த்துள்ளார். இதனால் மனம் நொந்துபோன இளைஞர் சில நாட்கள் அவரை மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அப்படியும் அவர் தவிர்த்து வந்ததால் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது முகநூல் நேரலையில் வீடியோ ஒன்றை பதிவு செய்தவாறே, தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், இதற்கு எனது காதலியும் அவரது குடும்பத்தாரும் தான் காரணம் என்றும் பேசி நேரலையிலேயே தற்கொலை செய்துகொண்டார். வீட்டிலுள்ள கிரைண்டர் மிஷினை வைத்து தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது நண்பர்களிடம், "நான் காதலித்த பெண்ணின் மொபைல் எண், புகைப்படங்கள் எல்லாம் பதிவிட்டுள்ளேன்.. அவளுக்கு திருமணம் நடைபெற விடாதீர்கள்.. நான் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனதோ, அதே போல் அவளுக்கு திருமணம் நடைபெறக்கூடாது" என்று கூறியுள்ளார்.
மேலும் தனது நண்பர் மற்றும் உறவினர்கள் அனைவரும் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறி தற்கொலை செய்தகொண்டார். இளைஞர் செய்த காரியம் குறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அவர் உடல் நலம் மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!