India
சிறுவயது நண்பனை கொடூரமாக கொன்ற இளைஞர்.. காதலி தான் காரணமா ? மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
காதலியுடன் டேட்டிங் செய்த நண்பனை, சக நண்பனே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பிவாந்தி பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்லாம் அன்சாரி (வயது 21), சமீம் அன்சாரி (வயது 29). சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந் இவர்கள், வெவ்வேறு பெண்களை காதலித்து வந்துள்ளனர். இதில் சமீம் ஓட்டல் நடத்தி வருகிறார்; அஸ்லாம் இரண்டு சொந்த கடைகள் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், அஸ்லாம் காதலித்து வந்த பெண்ணுக்கும், அஸ்லாமுக்கும் ஏதோ சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். எனினும் தனது காதலி தன்னை தேடி மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த அஸ்லாமுக்கு திடீரென்று அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அஸ்லாமின் நெருங்கிய நண்பரான சமீம், அஸ்லாமின் காதிலியுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். இதையறிந்த அஸ்லாம், 'நீதான் வேறு பெண்ணை காதலித்து வருகிறாய்.. அதோடு நிறைய பெண்களிடம் பேசுகிறாய்.. எனவே என் காதலியை விட்டு விடு.." என்று கூறி எச்சரித்துள்ளார். எனினும் அதனை செவிகொடுத்து கூட கேட்காத சமீம், மீண்டும் அந்த பெண்ணுடன் பேசி வந்துள்ளார்.
இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த அஸ்லாம், அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அப்படி சம்பவத்தன்று ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போதும் அஸ்லாம் காதலியை விட்டுவிடுமாறு சமீமிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஆனது.
இது கைகலப்பாக மாறியதில், ஆத்திரதமடைந்த அஸ்லாம், சமீமை சுமார் 9 முறை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி அவரது வாயிலேயே திணித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து அஸ்லாம் தப்பித்து ஓடியுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த அஸ்லாமையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலிக்காக நண்பனை, சக நண்பனே இவ்வளவு கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !