India
திட்டிய ஆசிரியர்.. 14வது மாடியிலிருந்து குதித்த 10ம் வகுப்பு மாணவன்: பெங்களூருவில் பதறவைக்கும் சம்பவம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தைச் சேர்ந்தவர் மோஹின். சிறுவனான இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் மோஹின் பிட்டி அடித்துள்ளார்.
அப்போது ஆசிரியரிடம் சிறுவன் மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் அவரை கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளனர். பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து குதித்தபோது கீழே விழாமல் மாடியில் உள்ள சுற்றில் சிக்கிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்து சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் சிறுவன் அங்கிருந்து கீழே விழுந்தான்.இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். இந்தச்சம்பம் குறித்து அறிந்த போலிஸார் அங்கு வந்து சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் சிறுவன் இப்படி அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து 14வது மாடிவரை சென்றான் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் திட்டியதால் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து 10 வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!