India
28 வெளிநாட்டு விஷ பாம்புகளை இரயிலில் கடத்திய பெண்.. பிடிபட்டது எப்படி ? - ஜார்கண்டில் பரபரப்பு !
28 வெளிநாட்டு விஷ பாம்புகளை இரயிலில் கடந்த முயன்ற பெண்ணை பயணிகள் பிடித்து இரயில்வே காவல்துறையில் ஒப்படைத்த சம்பவம் ஜார்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சக பயணிகளுடன் நீலாச்சல் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறியுள்ளார். அப்போது தனது கைகளில் வைத்திருந்த லக்கேஜை அவர் பத்திரமாக வைத்து வைத்து பார்த்துள்ளார். மேலும் அதிலிருந்து விநோதமாக சத்தமும் வந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சக பயணி ஒருவர் இது குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரளித்த இரகசிய தகவலின் பேரில், விசாரிக்க இரயில்வே அதிகாரிகளும் சென்றனர். அப்போது அவரிடம் விசாரித்தனர்; மேலும் தங்களது பையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அவர் விநோதமாக நடந்துகொண்டுள்ளார்.
மேலும் தனது பைகளை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மீண்டும் சந்தேகம் வலுவடைந்த அதிகாரிகள் அவரது பையை சோதனை செய்தனர். அப்போது அதில் சிறு சிறு டப்பாக்கள் இருந்துள்ளது. மேலும் அதில் பூச்சிகள், விஷ பாம்புகள் என அதிகமான வெளிநாட்டில் வாழ் பூச்சிகள் இருந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நாகாலாந்திலிருந்து மேற்கு வங்கம் சென்றுள்ளதும், பின் அங்கிருந்து டெல்லி செல்ல முயன்றுள்ளதும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிறு சிறு டப்பாக்களில் சுமார் 28 வெளிநாட்டு விஷ பாம்புகளும், பூச்சிகளும் இருந்துள்ளதும், அது கோடிக்கணக்கில் விலைபோகும் எனவும் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!