India

மொபைல்போன் பார்த்ததை கண்டித்த குடும்பத்தினர்.. ஆத்திரத்தில் சிறுவன் செய்த செயலால் திரிபுராவில் அதிர்ச்சி!

திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள ஷிப் பாரி என்னும் கிராமத்தில் பாதல் தேப்நாத் என்பவர் தனது குடும்பத்தாரோடு வசித்து வருகிறார். இவரில் வீட்டில் சம்பவத்தன்று காலையில் இருந்து யாரும் வெளிவராத நிலையில், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் உள்ளே முழுக்க ரத்தம் சிந்தி கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்துக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் வந்து அந்த வீட்டை ஆராய்ந்து பார்க்கையில் அதே பகுதியில் இருந்த குழியில் அந்த வீட்டில் இருந்த பாதல் தேப்நாத், அவரது மருமகன், பேத்தி மற்றும் பக்கத்து வீடு பெண் ஆகியோர் புதைக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலிஸார் சுமிதா தேப்நாத்தின் 15 வயது மகன்தான் இந்த கொலையை செய்துள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், வீட்டில் ஏற்பட்ட சண்டையில் 15 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்தவர்களை கொலை செய்து அவர்கள் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டு பெண் ஆகியோரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தலைமறைவாக உள்ள அந்த சிறுவனை கண்டுபிடித்தால்தான் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலிஸார் கூறியுள்ளனர். அதேநேரம் சிறுவன் அடிக்கடி மொபைல்போனை பயன்படுத்துவதால் அவனுக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்றும், இதனால் ஏற்பட்ட சண்டையில் அந்த சிறுவன் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் பக்கத்துவீட்டார் கூறியுள்ளனர்.

Also Read: நடுக்கடலில் மூழ்கத்தொடங்கிய கப்பல்.. கூக்குரலிட்டு உதவிகேட்ட ஈழத் தமிழர்கள்.. இறுதியில் நடந்த அதிசயம் !