India
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25 வயதுடைய இளைஞரான இவருக்கு பெற்றோர் இல்லாத காரணத்தினால் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். இப்படி இருக்கையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கத்தால் அஞ்சலி, ஷியாம் சிங்கை ஒரு தலையாக காதலிக்க தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக்கொள்வது, வெளியே செல்வது என்பதுமாக இருந்து வந்துள்ளனர். இதனால் காதலிக்க தொடங்கிய அஞ்சலி, தனது தாயுடன் ஷியாம் அத்தையிடம் மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து ஷ்யாமிடம் இதுகுறித்து விசாரிக்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனக்கு சிறிது காலம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார் பிறகு அஞ்சலி குறித்து விசாரிக்கையில், அவருக்கு ஏற்கனவே திருமணமானதும், அவரது கணவரை பிரிந்து வாழ்வதும் ஷ்யாம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.
எனவே அஞ்சலியிடம் திருமணத்திற்கு ஷியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஷ்யாமின் அத்தையும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த அஞ்சலி, ஷ்யாமிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளர்.
அப்படி சம்பவத்தன்று பால் வாங்க கடைக்கு சென்ற ஷியாம் சிங்கை மடக்கிய அஞ்சலி, அவரிடம் தகராறு செய்துள்ளார். திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் ஷ்யாமோ தொடர்ந்து மறுத்துள்ளார். அப்போது தனது கையில் 5 லிட்டர் கேனில் வைத்திருந்த ஆசிட்டை ஷியாம் மீது ஊற்றியுள்ளர்.
இதை துடிதுடித்து அலறிய ஷ்யாமின் கை, கால், உடல் என அனைத்து இடத்திலும் தீக்காயம் பட்டு கதறியுள்ளார். பின்னர் அவரை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து காவல்துறைக்கு அளித்த தகவல் அளித்தனர். மேலும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது ஷ்யாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குற்றவாளியான அஞ்சலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் ஒருவர் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”