India
பச்சிளம் குழந்தைக்கு பல நாட்களாக பாலியல் வன்கொடுமை.. ஆசிரியரே செய்த அவலம்.. ம.பி-யில் அரங்கேறிய கொடூரம் !
5 வயது பள்ளி சிறுமிக்கு ஆசிரியர் பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கத்வா பகுதியை அடுத்துள்ள கத்வா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 5 வயதுடைய சிறுமியும் பயின்று வருகிறார். அதே பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சுட்டியாக இருக்கும் இந்த சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நல கோளாறு ஏற்பட்டு சோகமாக காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமியோ தனது மழலை மொழியில் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆசிரியர் மவுல்வி அப்துல் சமத் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த ஆசிரியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதுவும் தான் பல நாட்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!