India
தண்டவாளத்தில் இருந்த வெடிகுண்டு.. பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்கள்.. இறுதியில் நடந்த கொடூரம்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே இருந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்ததுள்ளது. அதைக் கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என நினைத்து கையில் எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பந்து திடீரென வெடித்துச் சிதறியது. அதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வெடிகுண்டு ரயிலுக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்தது.
இது தொடர்பாக பேசிய போலிஸார், தண்டவாளத்தில் சில சமூக விரோதிகளால் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்த விபத்தில் காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!