India
Plasma-வுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ்.. நோயாளி உயிரிழப்பு- மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ்: பரபரப்பான உ.பி!
உத்தர பிரதேசத்தில் நோயாளிக்கு இரத்தத்தின் பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தற்போது சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு இரத்தத்தின் பிளாஸ்மா தேவை அதிகரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் புதிதாக இரத்த வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியை அடுத்திருக்கும் ஜல்வா என்ற பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பிரதீப் பாண்டே (வயது 32) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பிளாஸ்மா தேவைப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்காக அலகாபாத் பகுதியில் உள்ள இரத்த வங்கியில் பிளாஸ்மா வாங்கப்பட்டுள்ளது. இதை அவருக்கு ஏற்றிய நிலையில், அவர் உயிரிழந்தார். பிறகே அவருக்கு ஏற்றப்பட்டது இரத்தத்தின் பிளாஸ்மா அல்ல என்றும், வாங்கப்பட்ட பையில் சாத்துக்குடி ஜூஸ் இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த இரத்த வங்கி போலியானது என தெரியவந்துள்ளது. மேலும் பிளாஸ்மாவும், சாத்துக்குடி ஜூஸ்ஸும் பார்ப்பதற்கு ஒரே மாதரி இருப்பதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த மோசடி நடந்து வந்துள்ளது.
இதையடுத்து இதில் சம்மந்தப்பட்ட இரத்த வங்கி மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்ததோடு, இதில் சம்பந்தபட்ட ஊழியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை இடிப்பதற்கு பிரயாக்ராஜ் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!