India
செவிலியரை கட்டிப்போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 4 பேர் கொடூர செயல்-சத்தீஸ்கரில் அதிர்ச்சி
சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரகர் பகுதியை அடுத்துள்ள சிப்சிபி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர். இவர் அந்த பகுதியிலுள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த நிலையத்தில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தனியே வேலை செய்வதை நோட்டமிட்ட கும்பல் திடீரென அந்த சுகாதார நிலையத்தினுள் நுழைந்து பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு கூட்டுப்பாலியால் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை தங்களது மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். அதோடு இதனை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த பெண் நடந்தவற்றை தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், 4வதாக ஒரு நபர் மட்டும் தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தலைமை சுகாதார அலுவலர் பிரதிமா சிங் கூறுகையில், "எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாங்கள் வேலை செய்ய மாட்டோம்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!