India
ஆந்திரா :தற்கொலை செய்த மகள்.. ஆத்திரத்தில் மகளின் காதலனை கொலை செய்து மகள் அருகே சமாதி கட்டிய கொடூர தந்தை!
ஆந்திர மாநிலம், துவாரகா திருமலை மண்டலம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தர் தனிகடப்பா பவன் கல்யாண் (வயது 24) என்பவரும் கொடுகுப்பேட்டையை சேர்ந்த மரிது ஷியாமளா (வயது 18) என்பவரும் கல்லூரி படிக்கும் போதே காதலித்து வந்தனர்.
இவர்கள் காதல் விவகாரம் இவர்களின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஷியாமளா கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் வெளியே சென்ற பவன் கல்யாண் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது பவன் கல்யாணை இறுதியாக ஷியாமளாவின் தந்தை நாகேஸ்வரராவ் கடைசியாக அழைத்து பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.
மகள் தற்கொலை செய்துகொண்டதால் கடும் அதிருப்தியில் இருந்த நாகேஸ்வரராவ் இதற்கு காரணம் பவன் கல்யாண்தான் என நினைத்து அவரை கொலை செய்ய முடிவுசெய்துள்ளார். அதன்படி அவரை தனியே அழைத்த அவர், பவன் கல்யாணை அடித்து கொலை செய்து, தனது மகள் ஷியாமளாவின் சமாதிக்கு அருகில் அவரது சடலத்தை புதைத்து சமாதி கட்டியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!