India
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. சூட்கேஸில் கிடந்த சடலம்.. டெல்லியில் அதிர்ச்சி !
நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் குர்கான் அடுத்த இஃப்கோ சவுக் அருகே சாலையோர புதர்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பார்த்து காவல்நிலையத்துக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளார்.
அதன்படி அந்த இடத்துக்கு வந்த போலிஸார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயது இருக்கலாம் எனவும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
அந்தப் பெண் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் இடுப்பில் தீக்காயங்கள் போன்ற சில அடையாளங்கள் இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் தனிப்படையை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!