India
உ.பி : பொய்யான பாலியல் குற்றச்சாட்டு.. சாவுக்கு காதலியே காரணம் என வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை !
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிலிபிட் மாவட்டத்திலுள்ள பௌரியா என்னும் இடத்தில 28 வயது இளைஞர் ஒருவர் மேல் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலிஸார் அந்த இளைஞரை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தான் ஒரு பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டேன் என்றும், தன்னுடைய தற்கொலைக்குச் சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரின் குடும்பத்தினரும்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அந்த பெண்ணும் நானும் காதலித்தோம் என்றும், ஆனால் அந்த பெண்ணோடு உடலுறவு கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணுடனான தொடர்பை விட்டுவிட்ட நிலையில், என்னை பழிவாங்கும் விதத்தில் அந்த பெண் இவ்வாறு புகார் அளித்துள்ளார் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அதோடு, இந்த வழக்கில் என்னை கைதுசெய்யப்படுவோமோ என்ற பயத்தில், ஒரு வாரத்துக்கும் மேலாகக் கரும்புத் தோட்டத்தில் நான் தலைமறைவாக இருந்தேன் என்றும், அந்தப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டு என் சுயமரியாதையையும் மனநிலையையும் கடுமையாக பாதித்தது என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட பெண் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த வீடியோ விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அடுத்தடுத்த நாளில் 2 துயரம்.. நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை... பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
-
"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !
-
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!