India
டெல்லியில் மற்றொரு நிர்பயா கொடூரம்.. பெண்ணை வன்கொடுமை செய்து நடுத்தெருவில் வீசிய சகோதரரின் நண்பர்கள் !
காசியாபாத்தை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 2 நாட்களுக்கு முன் தனது சகோதரரின் பிறந்தநாளை கொண்டாட குருகிராம் என்ற இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் தனது சகோதரரின் நண்பர்கள் இருவருடன் காரில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது காரில் இருந்த சகோதரரின் நண்பர்கள் காரை ஒதுக்குபுறமான இடத்துக்கு கொண்டு சென்று அங்கு வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின்னர் அங்கு தனக்கு தெரிந்தவர்கள் மேலும் 3 பேரை அழைத்துள்ளனர்.
அவர்கள் அங்கு வந்த நிலையில், அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின்னர் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பி கம்பியை செருகி டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் நடுரோட்டில் அவரை வீசிச்சென்றுள்ளனர்.
நடுரோட்டில் பெண் ஒருவர் கடுமையான காயங்களோடு இருப்பதாய் கண்டவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். அதன்படி அங்கு வந்த போலிஸார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 2012ல் டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணை ஒரு கும்பல் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது டெல்லியில் மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
-
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!