India
ஆந்திரா : ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்.. கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன்..
ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை 13 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை அடுத்துள்ள தந்து என்ற கிராமத்தில் பெண் ஒருவர் தனது 18 வயது மகளுடன் ஆடு வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அதனை மேய்ச்சலுக்காக வெளியில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், திடீரென்று இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தனது மகளை ஆடுமேய்க்க அனுப்பியுள்ளார். மகளும் ஆடுகளை வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பக்கம் எதேர்ச்சியாக வந்த 13 வயது சிறுவன் ஒருவன், அந்த இளம்பெண்ணிடம் நேக்காக பேச்சு கொடுத்திருக்கிறார்.
சிறுவன் தானே என்று எண்ணி அவரும் பேசியுள்ளார். அப்போது திடீரென்று சிறுவனின் பேச்சில் மாறுதல் ஏற்பட்டது. பின்னர் மெதுவாக அந்த பெண்ணின் உடலை தீண்டியுள்ளார். முதலில் தெரியாமல் தீண்டினான் என்று அந்த பெண் எண்ணிய நிலையில், மீண்டும் தீண்டியுள்ளார்.
பின்னர் அப்படியே அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சிறுவனை தடுத்துள்ளார். மேலும் கண்டித்துள்ளார். ஆனால் சிறுவனோ அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை தடுக்க முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
அதோடு கீழே கிடந்த கல்லையும் எடுத்து அந்த இளம்பெண்ணை தாக்க முயன்றுள்ளார். இதில் அலறி கூச்சலிட்டுள்ளார் அந்த பெண். பெண்ணின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அங்கிருந்தவர்கள், பெண்ணை மீட்டனர். ஆனால் அதற்குள் அந்த சிறுவன் தப்பியோடியுள்ளார்.
தொடர்ந்து மீட்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தலைமறைவாக இருந்த சிறுவனை தேடினர்.
பின்னர் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!