India

மனித இறைச்சி.. ஒவ்வொரு பாகத்திற்கு ஒவ்வொரு ரேட்.. கேரளா நரபலி சம்பவதத்தில் திடுக்கிடும் வாக்குமூலம் !

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் பணத்திற்காக இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்பவரும், பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதியினரையும் காவல்துறை கைது செய்தனர்.

பின்னர் காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடலை வெட்டி, சமைத்து சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து வீட்டை மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை செய்தனர். அப்போது பலி கொடுத்த ஆயுதங்களான 3 கத்திகள், சில மரக்கட்டைகள், நரபலி கொடுத்த பெண்களின் உடலை சமைத்து சாப்பிட்ட பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

நரபலி வழக்கில் கைதான தம்பதியினர் லைலா - பகவல் சிங்

மேலும் அவர்களது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில், இரத்த கரை இருந்துள்ளது. இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை துண்டுதுண்டாக வெட்டி சமைத்துள்ளனர்.

அதிலும் மீதி இருக்கும் பாகங்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்றும், அதிலும் கை, கால், மார்பகம், இதயம், ஈரல் என ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு விலைக்கு போகும் என்றும் தம்பதியினரிடம், முகமது கூறியுள்ளார்.

முஹம்மது ஷாஃபி

மேலும் இதனை பெற்றுக்கொள்ள பெங்களூருவில் இருந்து ஒருவர் வருவார் என்றும் கூறியுள்ளார். இதனால் சுமார் 10 கிலோ எடை கொண்ட மனித இறைச்சியை ஃபிரிட்ஜில் பதப்படுத்தப்பட்டன. ஆனால் முகமது கூறியபடி யாரும் வரவில்லை என்பதால் அந்த தம்பதியினர் மனித இறைச்சியை குழிதோண்டி புதைத்துள்ளதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அப்படி சமைக்கப்பட்ட மனித இறைச்சியை பகவல்சிங் சாப்பிட மறுத்ததால், அவரது வாயில் கட்டாயப்படுத்தி லைலா திணித்துள்ளார். அப்போது அதனை பிடிக்காமல் துப்பியுள்ளார் பகவல்சிங், எனவே ஃபிரிட்ஜில் இரத்த கறை இருப்பதாக தம்பதியினர் தெரிவித்தனர்.

நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி, பத்மா

முன்னதாக போலி மந்திரவாதியான முகமது, ஸ்ரீதேவி என்ற போலி முகநூல் கணக்கின் மூலம் பகவல்சிங் - லைலா தம்பதியினருக்கு அறிமுகத்தியிருக்கிறார். மூடநம்பிக்கையில் அதிகம் நாட்டம் கொண்ட இவர்களை, தனது பணத்தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் முகமது. நரபலி கொடுக்கும் சம்பத்தவத்திற்கு முன்பு வரை சுமார் 6 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 100 இளம்பெண்களின் ஆபாச வீடியோ: குவைத்தில் தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கைது - ஏர்போர்ட்டில் அதிரடி!