India
நண்பர்களை வீட்டிற்கு அழைத்து PARTY கொடுத்த இளம்பெண்.. இறுதியில் நேர்ந்த கொடுமை -மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியில் வசித்து வருபவர் 25 வயதுடைய இளம்பெண். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க எண்ணியுள்ளார். அதன்படி அன்று ஆண் நண்பர்கள் 3 பேரையும், பெண் தோழி ஒருவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதன்படி வீட்டிற்கு வந்த அவர்கள் பார்ட்டி நடந்து கொண்டிருக்கும்போது, ஆண் நண்பர்கள் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி பார்ட்டி ஏற்பாடு செய்த பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட மதுவில், மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.
அந்த பெண்ணும் அதனை குடித்த பிறகு மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரை ஒரு அறைக்கு எடுத்து சென்ற அவர்கள், மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் மறுநாள் காலை எழுந்து பார்க்கையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பாதை உணர்ந்தார். பின்னர் கதறி அழுத அவர், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன்படி காவல்நிலையம் சென்ற அவர், புகார் அளித்தார்.
பின்னர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்ட்டி கொடுக்க எண்ணிவீட்டிற்கு அழைத்து வந்த இளம்பண்ணின் நண்பர்களே, பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!