India
தண்ணீர் பாட்டிலில் இருந்த பல்லி.. திரையரங்கில் படம் பார்க்க வந்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஹோட்டல்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாக வலியுறுத்தி எச்சரிக்கை செய்தும் வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் உணவில் காது குடையும் பஞ்சு, புழு, பல்லி இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பிரபல திரையரங்க கேண்டீனில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பல்லி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே பிரபல திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்குப் படம் பார்க்க வந்த ஒருவர் திரையரங்கில் இருந்த கேண்டீனில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர். அப்போது அந்த தண்ணீர் பாட்டிலில் இறந்த சிலையில் பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து அவர் கேண்டீன் ஊழியரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!