India
ம.பி : “அப்பா கிட்ட நா கூட்டிட்டு போறேன்..” சிறுமியை கிடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர் !
மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அடிக்கடி சிறுமியின் தந்தையின் நண்பர் வருவார். வரும்போதெல்லாம் சிறுமியிடம் கொஞ்சி விளையாடி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி பள்ளி முடிந்து வெளியே வந்து தந்தைக்காக காத்துக்கொண்டிருந்தாதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த நண்பர் சிறுமியை, "உனது அப்பாவிடம் அழைத்துசெல்கிறேன். என்னுடன் வா" என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, அவருடன் சென்றுள்ளார்.
ஆனால் அந்த நபரோ சிறுமியை ஒரு இடிந்த கோட்டை போன்ற ஒரு இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டனர். மேலும் குற்றவாளியையும் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பிச்சென்றுள்ளார்.
பின்னர் தப்பியோடியவரை பின்தொடர்ந்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியிடம் நடைபெற்ற விசாரணையில், தனக்கு நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
தந்தையிடம் கூட்டி செல்வதாக கூறி, 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தையின் நண்பரின் செயல் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!