India
சிறுமிகளை நிர்வாணப்படுத்தி பூஜை.. கேரளத்தை உலுக்கிய நரபலி சம்பத்தைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி !
கேரள மாநிலம் கொச்சி, பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பகவந்த் சிங் - லைலா தம்பதியினர், முஹம்மது ஷாஃபி என்ற போலி மந்திரவாதியை பணக்கஷ்டம் என்று அணுகியுள்ளனர். அந்த போலி சாமியாரோ தெரியாத பெண்ணை நரபலி கொடுக்கவேண்டும் என்றும், அதற்கான பெண்ணை தானே அழைத்து வருகிறேன் என்று கூறி, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று வந்த பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த பலி பூஜை பலனை கொடுக்கவில்லை என்று தமிழகத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்று அவரையும் நரபலி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், இதில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேகொண்டனர்.
அப்போது நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை துண்டுதுண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டு விட்டதாக அந்த தம்பதியினர் வாக்குமூலம் கொடுத்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே கேரளா பத்தனம்திட்டா பகுதியில் வேறொரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, இதே பகுதியைச் சேர்ந்த ஷோபனா (52) என்ற பெண் கடந்த 8 வருடங்களாக வாசந்தி அம்மா மடம் என்ற பெயரில் மாந்திரீகம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பேய் ஊட்டுவதாக கூறி, அங்கு அழைத்து வரப்படும் சிறுவர் - சிறுமிகளை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்து இந்த ஷோபனா, இப்படி காரியங்கள் செய்வது அந்த பகுதி மக்களிடம் தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தி புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் பெண் மந்திரவாதி ஷோபனாவையும், அவரது இரகசிய காதலன் உண்ணிகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்தனர்.
முன்னதாக குஜராத்தில் பண பிரச்னை இருப்பதாக கூறி 11 வயதுமிக்க சொந்த மகளை பெற்றோரே நரபலி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் வெளி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Also Read
-
"விஜய் ஒரு மாய பிம்பம்": திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விமர்சனம்!
-
”தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தலைமுறை காக்கும் ஒளிவிளக்கு” : தி.க தலைவர் கி.வீரமணி வரவேற்பு!
-
CSK அதிர்ச்சி தோல்வி… தோனி இல்லாமல் கரை சேருமா? எமோஷனலான ஜடேஜா - முழு விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of Control என்பதை மீண்டும் நிரூபிப்போம்: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
-
பணம் வாங்கச் சொன்ன விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ வலியுறுத்தல்!