India
டியூசன் டீச்சருக்காக காத்திருந்த பள்ளி சிறுமி.. பாலியல் வன்கொடுமை செய்த Watchman.. மும்பையில் அதிர்ச்சி !
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. அந்த பகுதி பள்ளியில் படிக்கும் இவர், தினமும் டியூசன் செல்வது வழக்கம். அதன்படி நேற்றையமுன்தினம் மாலை டியூசன் சென்றுள்ளார். அப்போது அவரது டீச்சர் வர தாமதமானால் சிறுமி காத்துக்கொண்டிருந்தார்.
சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்றுகொண்டிருந்ததைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய வாட்ச்மேன் ஒருவர் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது அவரை பாதுகாப்பான பகுதிக்கு கூட்டி செல்வதாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் டியூசன் டீச்சர் வந்ததுடன் தனக்கு நடந்தவற்றையும், அந்த வாட்ச்மேனின் நடவடிக்கை பற்றியும் அழுதுகொண்டே கூறியுள்ளார் சிறுமி. இதைக்கேட்டு அதிர்ந்த டீச்சர், இது குறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கே இருந்த வாட்ச்மேனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
டியூசன் டீச்சருக்காக காத்திருந்த 11 வயது பள்ளி சிறுமியை, அங்கிருந்த் வாட்ச்மேன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!
-
‘சமூகநீதி நாள்’ - அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்புகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!