India
ஆண்மை அதிகரிக்கும்?.. ஆந்திராவில் சட்ட விரோதமாக ரூ.600க்கு கழுதை கறி விற்பனை: 7 பேர் கைது!
ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கழுதை கறி விற்கப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலிஸார் பாபட்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை செய்தனர். இதில் கழுதை கறி விற்பனை செய்யப்படுவது உறுதியானது. உசிலிப்பேட்டை பகுதியில் 2 இடத்திலும், வேடபாலுத்தில் ஒரு இடத்திலும், சிராலா பகுதியில் ஒரு இடத்திலும் என 4 இடத்தில் ஒரு கிலோ கழுதை கறி ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
பின்னர் கழுதை கறியை விற்ற 11 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 400 கிலோ கழுதை கறியைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டவிரோதம் ஆகும். இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்படும். மேலும் கழுதை கறி வாங்குவதும் சட்டவிரோதமாகும்.
கழுதை கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பொதுமக்கள் பலர் வாங்கி சாப்பிடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திராவில் சட்டவிரோதமாக கழுதை கறி விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’