India
பஞ்சர் ஒட்டும் பசையை முகர்ந்து பார்த்த சிறுவன்.. திடீரென துடிதுடித்து உயிரிழந்ததால் ஆந்திராவில் அதிர்ச்சி
ஆந்திரபிரதேச மாநிலம் சீனிவாசபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுவன். அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் இவர், வாகனங்களுக்குப் பஞ்சர் ஒட்டும் பசையை முகர்ந்து பார்த்து போதையேத்தி வந்துள்ளார்.
இதையே சிறுவன் வழக்கமாக செய்து வந்துள்ளதை கண்ட அவரது பெற்றோர், சிறுவனை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்களது பேச்சை கேட்காமல் இப்படி செய்து தனக்கு போதையேற்றி வந்துள்ளார். போதைக்கு அடிமையான இவர், யார் பேச்சையும் கேட்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், மாடிக்கு சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். மேலும் அவரது அருகில் பஞ்சர் ஒட்டும் பசையின் டியூப் இருந்துள்ளது.
இதையடுத்து சிறுவனை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அதிர்ந்த பெற்றோர் கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! : “முறைகேடு நடைபெறவில்லை” என உத்தரவு!
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!