India
இளம்பெண் வயிற்றுக்குள் 5 வருடமாக இருந்த கத்தரிக்கோல்.. பிரசவத்தின் போது நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்துள்ள தாமரச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஹர்சீனா. 30 வியத்தாகும் இவருக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2017-ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததையடுத்து ஹர்சீனாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டு வைத்தியம் எடுத்து வந்துள்ளார். மேலும் மருத்துவரிடம் அணுகிய போது, அவர்கள் மாத்திரைகொடுத்துள்ளனர். இருப்பினும் தொடர்ச்சியாக வயிற்றில் வலி ஏற்பட்டு வருகிறது என்று வேறொரு மருத்துவரை அணுகியபோது, அவர்கள் ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஸ்கேன் செய்து எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் சுமார் 12 செ.மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹர்சீனாவுக்கு உடனடியாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை வெளியே எடுக்கப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு அளித்துள்ளார். மேலும் ஹர்சீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் மருத்துவர்களின் அலட்சியத்தில் இளம்பெண் வயிற்றுக்குள் 12 செ.மீ., நீளமுள்ள கத்தரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!