India
லாட்டரி சீட்டுக்காக கொடூரம் ! 2 அப்பாவி பெண்களை நரபலி கொடுத்த தம்பதியினர்.. கேரளாவில் அதிர்ச்சி !
லாட்டரி சீட்டுக்கு என்று பெயர் போன மாநிலம் தான் கேரளா. இங்கு லாட்டரி சீட்டு வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும் என்று மக்கள் பலரும் லாட்டரி சீட்டு வாங்குவர்.
அப்படி வாங்கியதில் சமீபத்தில் கூட கடன் தொல்லையால் தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்த சில மணி நேரங்களில் லாட்டரி சீட்டில் லட்ச கணக்கில் பணம் விழுந்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.
மேலும் அண்மையில் முடிந்த ஓணம் பண்டிகையின்போது கூட ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கோடி கணக்கில் லாட்டரி சீட்டு விழுந்தது. அதோடு சுமார் 52 ஆண்டுகளாக ரூ.3.5 கோடிக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலித் தொழிலாளி ஒருவருக்கு வெறும் 5000 ரூபாய் பணம் கிடைத்த சோகமும் நடந்துள்ளது.
இந்த நிலையில் கொச்சியில் லாட்டரி சீட்டு பணத்திற்காக ஆசைப்பட்டு தம்பதியினர் ஒருவர் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளா மாநிலம் கொச்சியில் வசித்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காணாமல் போனதாக கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக லைலா மற்றும் பகவந்த் சிங் என்ற தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் அவர்களின் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதாவது கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற இரண்டு பெண்களை ஏமாற்றி இந்த தம்பதியினர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை நரபலி கொடுத்தால் லாட்டரி சீட்டு பணம் விழும் என்ற மூடநம்பிக்கையில் பலி கொடுத்து புதைத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் புதைத்த இடத்தை தம்பதியினர் சொல்லவே, அங்கே சென்ற அதிகாரிகள் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
இதையடுத்து குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது அதிகாரிகள் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறேதும் குற்றவாளிகள் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!