India
படம் பார்க்கும்போது திடீரென வெடித்த LED TV: 16 வயது சிறுமி பரிதாப பலி: இடிந்து விழுந்த வீடு!
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஓமேந்திரா. 16 வயது சிறுமியான இவரும், நண்பர் கரண், தாய், அவரின் சகோதரர் ஆகிய நான்கு பேர் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் டிவி வெடித்துள்ளது. இதில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.
பின்னர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி ஓமேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற மூன்று பேருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பொதுமக்கள், "திடீரென பயங்கர சத்தம் கேட்டது. நாங்கள் முதலில் சிலிண்டர்தான் வெடித்து விட்டது என நினைத்தோம். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டிலிருந்து புகை வந்தது.
அங்கு சென்றுபார்த்தபோது வீட்டின் சுவர் உடைந்திருந்தது. அப்போதுதான் சுவரில் வைத்திருந்த LED TV வெடித்தது என்று தெரிந்தது" என கூறினர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து LED TV எப்படி வெடித்தது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
வீட்டிலிருந்த LED TV வெடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!