India
சமூக வலைதளம் மூலம் மருத்துவருடன் பழக்கம்.. ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை.. உ.பி-யில் பயங்கரம் !
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி என்ற பகுதியில் பெண் ஒருவர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சமூக வலைதளங்களை அதிகமாக உபயோகிக்கும் இவருக்கு, அதன்மூலம் மருத்துவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பெண்ணும் அவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும் அவரை சந்தித்து இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுள்ளார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், பிறகு சம்மதித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே அந்த மருத்துவரின் நண்பர்கள் இரண்டு பேர் இருந்துள்ளனர்.
இதையடுத்து அந்த பெண்ணை மிரட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அவர்கள் மருத்துவர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”