India
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ! -உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரப் பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார்.
பின்னர் சிறுவன் அந்த சிறுமியை அழைத்து அவரை தனியே ஒரு இடத்துக்கு கூட்டிசென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
சிறுமியின் நிலை குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார், அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். 12 வயது சிறுவன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடந்துவருவதற்கு மாநில அரசை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?
-
”பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கரைபுரண்டோடும் ஊழல்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
-
இந்தியா மீதான 50% வரி விதிப்பு அமலுக்கு வந்தது! : அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்!