India

இஸ்ரோவுடன் தொடர்பை இழந்ததா மங்கள்யான் ? செவ்வாயில் 08 ஆண்டுகள் தொடர்ந்த சாதனை பயணம் நிறைவு !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தை பிஎஸ்எல்வி-25 ராக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்றது. இதில் 15 கிலோ எடை கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் மீது படிந்துள்ள தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் வெற்றிகரமாக மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இத்தியான்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த 4-வது நாடு என்ற சாதனையை நம் நாடு பெற்றது.

6 மாதமே இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மங்கள்யான் தொடர்ந்து 8 ஆண்டுகள் இயங்கி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் படம் எடுத்து அனுப்பி இருந்தது. மேலும், பல ஆச்சரிய தகவல்களை மங்கள்யான் தொடர்ந்து அனுப்பி வந்தது.

இந்த நிலையில் மங்கள்யான் விண்கலத்துடனான தொடர்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விண்வெளியில் அண்மையில் உருவான மிக நீண்ட கிரகணம் ஒன்றால் மங்கள்யான் விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்து போயிருக்கலாம் எனவும் அதன் பேட்டரிகள் சேதம் அடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Also Read: சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவன்.. சக நண்பர்கள் வெறிச்செயல்.. டெல்லியில் அதிர்ச்சி !