India
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கும்பல்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் அதனை வீடியோவாக பதிவுசெய்த அந்த கும்பல் அதை வைத்து அந்த சிறியை பலமுறை மிரட்டி வந்துள்ளனர்.
அதோடு அந்த பாலியல் வன்கொடுமை வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோருடன் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தியபோது பல உண்மைகள் வெளிவந்துள்ளது.
அந்த கும்பல் முதலில் சிறுமியிடம் 50,000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அதோடு மேலும் 2.5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். மேலும் பணம் தர மறுத்தால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் காவல்துறை பொறுப்பாளர் அமித் சவுத்ரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகார் எடுக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!