India
உ.பி: வகுப்பறையில் பூட்டப்பட்ட சிறுமி..வீடு திருப்பாத மகளை தேடி சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநில பள்ளிகள் தொடர்ந்து ஏராளமான சர்ச்சையில் சிக்கிவருகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை மேலும் ஏராளமான புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு பள்ளியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் அந்த மாணவி வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், அங்கு ஏதும் விவரம் தெரியாததால் மாணவியின் வகுப்பு அறை அருகே சென்றுள்ளனர். அப்போது அந்த அறைக்குள் இருந்து சிறுமியின் சத்தம் கேட்டுள்ளது.
உடனே சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக பள்ளியின் கதவை திறந்து உள்ளே சென்றபோது சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்துள்ளார். பின்னர் உடனே சிறுமியின் பெற்றோர் சிறுமியை அழைத்துச்சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த பகுதியில் யூனியன் தேர்தல் நடைபெறவிருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்பே சென்றது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை கழக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்..” - முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!