India
CPIM மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார் - அரசியல் கட்சியினர் இரங்கல்!
கேரள மாநிலம் தலசோரி மாவட்டம் கொடியேரி பகுதியைச் சேர்ந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன் (69). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், கேரள மாநிலத்தின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர்.
இந்நிலையில், கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். முன்னதாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகி, கேரளாவில் உள்ள ஏ.கே.ஜி சென்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வெடுத்து வந்தார்.
பின்னர் தீவிர உடல்நிலை பாதிப்பை அடுத்து சென்னை கீரிஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கொடியேரி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!