India
5 கிராமங்கள்.. 12 பேரை கடித்த பிட்புல் நாய் அடுத்து கொலை: பஞ்சாபில் அதிர்ச்சி!
நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான பிட்புல் நாய். வேட்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த நாயை இந்தியாவில் சிலர் தங்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
ஆனால், அண்மைக் காலமாக உரிமையாளர்களையே பிட்புல் நாய் கடித்த சம்பவத்தை நாம் பார்த்திருப்போம். மேலும் மாடுகளைக் கூட இந்த நாய் விட்டு வைக்காமல் கடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் 12 பேரைக் கடித்துக் குதறிய பிட்புல் நாய் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஒருவர் பிட்புல் நாயை வளர்ந்து வந்துள்ளார். இந்த நாய் திடீரென வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது.
இதையடுத்து அந்த நாய் 5 கிராமங்களுக்குச் சுற்றித்திரிந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இதுவரை 12 பேரை இந்த பிட்புல் நாய் கடித்துள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சக்தி சிங் என்பவரைக் கடித்தபோது அவர் தற்காப்புக்கா நாயை அடித்தே கொலை செய்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட 5 கிராம மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!