India
சமூக வலைதளத்தால் வந்த வினை.. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 மருத்துவர்கள்: உ.பியில் பகீர் சம்பவம்!
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக கெய்லி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சித்தார் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் நட்பாகப் பேசி பழகி வந்துள்ளது.
பின்னர் மருத்துவர் சித்தார்த்தைச் சந்திப்பதற்காக இளம் பெண் ஆகஸ்ட் 10ம் தேதி பஸ்திக்கு வந்துள்ளார். பிறகு அவரை மருத்துவமனை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் மருத்துவர்.
அங்கு இளம் பெண்ணை சித்தார் உள்ளிட்ட 3 மருத்துவர்கள் கூட்டாகச் சேர்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் பஸ்தி மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மூன்று மருத்துவர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இளம் பெண்ணை 3 மருத்துவர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!